குஷ்புவும் மன்னிப்பும்

குஷ்புவும் மன்னிப்பும்

குஷ்பூ குஷ்பூ என்று எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று பார்த்தால் குஷ்பூவுக்கு கோவில் கட்டிக் கும்பிட்ட அதே ஆண்குலம்தான் இப்போது பெண்களுக்கு அதிலும் முக்கியமாக தமிழ்ப் பெண்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பாய்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண் தன்னுடையக் கருத்தைச் சொல்லக் கூட உரிமை இல்லையா? அதிலும் நாட்டில் ஒன்றும் நடக்காத விஷயத்தைப் பற்றிச் ஒன்றும் சொல்லவில்லையே! பெண்ணின் கற்பு அவளின் கன்னித்தன்மையில் மட்டும் தான் இருக்கிறது என்ற நிலை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இருக்கப் போகிறது? கற்புக்கு அளவுகோல்கள் யாரேனும் கண்டு பிடித்து இருக்கிறார்களா?

வீட்டை விட்டு வெளியில் வந்து நின்றாலே கற்பு போய்விட்ட மாதிரி கண்டிக்கும் காலம் (ரொம்ப நாட்களுக்கு முன்பு இல்லை!) யாரவது வீட்டிற்கு வந்தால் வாசலில் வந்து நின்று வரவேற்க மாட்டார்கள். கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு "அவங்க வீட்டுல இல்லையே" என்று சொல்லியனுப்பிவிடுவார்கள். இதுவும் ரொம்ப நாட்களுக்கு முன்பு இல்லை. பெரிய பெண் ஆகி விட்டால் அவ்வளவுதான் படிப்புக்கும் முற்றுப் புள்ளி! பிறகு அந்தப் பெண்ணை வெளியிலேயே அனுப்ப மாட்டர்கள். இது கூட ரொம்ப நாட்களுக்கு முன்னால் இல்லை. இந்தக் காட்சிகள் எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். நான் இருந்தது அப்படி ஒன்றும் குக்கிராமம் இல்லை. இப்படியெல்லாம் பெண்களை பொத்தி பொத்தி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெண்பிள்ளைங்க மட்டும் படிக்கிற பள்ளிக்கூடம், கல்லூரி, விடுதி வாசலில் நின்று பெண்ணை பத்திரமாகக் விடுமுறைக்கு கூட்டிக் கொண்டுப் போகும் அப்பாக்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே நம் கண் முன்பாகவே இரண்டு தலைமுறைகளின் வாழ்க்கை முறைகள் மாறிக் கொண்டேயிருந்தது. ஆண்களை நல்ல நண்பர்களாக நினைத்து சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டு ஒரே வீட்டில் வாடகையை பகிர்ந்து கொண்டு வாழும் ஆண் பெண் நண்பர்களைப் பார்த்தாகிவிட்டது.

என் பாட்டி காலத்தில் ஆண் நண்பர்களை வீட்டுக்குக்கே கூட்டி வரமாட்டார்கள். அப்படியே சினேகிதர்களை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தாலும் வீட்டில் இருக்கும் வயதான பாட்டிதான் வரவேற்பாள். காபி, டிபனெல்லாம் பின் கட்டிலிருந்து ஆண்கள்தான் கொண்டு வருவார்கள். என் அம்மா காலத்தில் கொஞ்சம் மாறி "வாங்க காபி சாப்பிடரீங்களா?", என்று சகஜமாகக் கேட்கும் அளவிற்கு எல்லைகள் கொஞ்சம் விரிந்திருந்தது. இப்படி காலத்துக்கு காலம் எல்லாம் மாறும் போது பெண்கள் மட்டும் இன்னும் கண்ணகி காலத்திலேயே இருந்து சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா? சன் தொலைக் காட்சியில் ஒரு பெண்மணி வீராவேசமாக நாங்க கண்ணகிப் பரம்பரைப் பெண்கள்! எங்களை இப்படி அவமானப் படுத்துவது போல் குஷ்பூ பேசலாமா? என்று கேட்டார்கள். கண்ணைகி காலத்திலே தானே மாதவியும் இருந்தாள். திருமணமாகாமல் குழந்தையும் பெற்றாள்? கண்ணைகியின் கற்புக்கு மாதவியின் கற்பு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்!

திருமணத்துக்கு முந்தைய உறவு, திருமணத்துகுப் பிந்தைய உறவு இதெல்லாம் நடக்காமலா இருக்கிறது? எத்தனை சதவீதம் என்பதுதான் பிரச்சனையா இல்லை இப்படி நடப்பதே இல்லை என்கிறார்களா? நடக்காத விஷயத்தைச் சொல்லவில்லை. சொல்லப்பட்ட விதத்தில் எங்கோ தப்பியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆ! அப்படியெல்லாம் நடப்பதே இல்லை சும்மா தமிழ்ப் பெண்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக இப்படி சொல்லிவிட்டார்கள் என்று கூக்குரலிடும் லட்சியவாதிப் பெண்கள் ஏன் உண்மைக்குப் புறம்பாக இருக்க வேண்டும்? உண்மைக்கும் இலட்சியத்துக்கும் நிறைய இடைவெளி கிடையாதே!

சரி!பாவம் அவங்கதான் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டாச்சே! இனிமே என்ன?
இதெல்லாம் கிடக்கட்டும்! ஆட்டோகிரா·ப் படம் மாதிரி உங்க பள்ளியில் உங்களோடு படித்த இளம் பருவத்துத் தோழர், பிறகு கல்லூரியில் உங்களுக்கு காதல் கவிதை கொடுத்து பஸ்ஸில் உங்களோடு கண்ணால் பேசிய கல்லூரிக் காதலர், உண்மையான நட்பில் இணைந்து உங்களோடு சகலத்தையும் பகிர்ந்து கொண்ட உண்மை நண்பர் என்று உங்க ஆட்டோகிரா·ப்பை உங்க கணவர் கிட்டயாவது இல்லை உங்களைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் உங்க ஆண் நண்பர் கிட்ட பெண்களே! யாராவது சொல்லியிருக்கீங்களா? சொன்ன என்ன ஆகும் என்பது தெரியாதா? அரசக் குடும்பத்தில் பிறந்து கன்னிமாடத்தில் ஆண்வாடையேத் தெரியாமல் வளர்ந்து பிறகு அண்ணலும் நோக்க அண்ணியும் நோக்க கண்ணில் பட்ட முதல் ஆண்மகனையே புருஷனாக வரித்ததாகச் சொன்னால்தானே கற்புக்கு நாம் முழு உத்திரவாதம் கொடுத்து பிறகு திருமணத்திற்கு அவர்கள் உத்திரவாதம் கொடுக்க முடியும்? ஆனாலும் குஷ்பூ மேடம் தங்கர்பச்சான் விவகாரத்தில் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டு விட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தில் இப்படி பொத்தாம் பொதுவாகக் கருத்து சொல்லியிருக்க வேண்டாமோ?

19 மறுமொழிகள்:

At 10:10 PM, Blogger Ganesh Gopalasubramanian said...

நல்லா நெத்தியடியா அடிச்சிருக்கீங்க
இந்த பதிவையும் கொஞ்சம் பாருங்க

http://gganesh.blogspot.com/2005/09/blog-post_27.html

 

At 10:15 PM, Blogger வீ. எம் said...

சரியா சொன்னீங்க.. அது தான் நானும் சொல்றேன்..

தங்கர் சொன்னப்போ .. முதல் ஆளா நின்னு மன்னிப்பு கேளுனு குதித்த குஷ்பு.. இப்படி பேசியிருக்கலாமோ??? அதுவும்.. தங்கர் பேசிய அதே மாதிரியான விஷயம்..

இங்கே.. நாம நடக்காததையா சொல்லிட்டாரு குஷ்புனு சொன்னா.. அங்கேயும் அதே தானே?
இங்கே கருத்து சுதந்திரம்னு சொன்னா, அங்கேயும் அதே தானே??

ரெண்டு பேருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை..ஏன்னா..ரெண்டுமே சினிமா என்கிற குட்டையில் ஊறிய மட்டைகள்.. அப்படித்தான் இருக்கும்..

வினை விதைத்தவன் , வினை அறுப்பான்.. !!

 

At 10:17 PM, Anonymous Anonymous said...

//கண்ணைகியின் கற்புக்கு மாதவியின் கற்பு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்!//

Ada Thooooooooo!!

 

At 11:47 PM, Blogger neyvelivichu.blogspot.com said...

miga nanRaaga ezhuthi irukkiRIrgaL.

//கண்ணைகியின் கற்புக்கு மாதவியின் கற்பு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்!//

migach seriyaana karuththu.. kaRpai thiNippathu nam paNpaadaa..

kamala haasan enakku thirumaNam enRa amaippin meel nambikkai illai enRu kURi sarika vudan thirumaNamaagaamal iraNdu kuzhanthaigaL peRRathu yaarudaiya vimarsanaththukkum aaLaagavillaiye..

cigarette pidiththaal parththu kaRRuk koLLum rasigargaL, ithai kaRRuk koLLa mattargalaa..

ellavaRRiRkum ore kaaranam than.. avar aaN enna veeNdumenRaalum seyyalaam.

ada thoo enRu thuppiyavar uNNmaigaLidamirunthu oLinthu vaazhkiRaar.. poonai kaNNai mUdikkoNda kathai thaan..

eththanaiyoo peer seernththu vaaznthu pin thirumaNam seithu koLkiRaargaL.. pirinthum pogiraargaL.. ithu avargaLukku kodukkap patta aRivuRaiyaaga eduththuk koLLalaame..

Kushbuvin karuththu "thamizhagaththil ithu pool thirumaNaththukku mun uRavu koLpavargal, sernthu vaazpavargaL eNNikkai perugi Ullathu" enRa angle lil parunggaL.. sariyaagap puriyum.. out of context eduththu kushbU thamizhpeNkaLai ippadi seyyachchonnar appadi seyyachchonnar enpathaal thaane pirachchinai.

anbudan vichchu
neyvelivichu.blogspot.com

 

At 11:53 PM, Blogger Narain Rajagopalan said...

//கண்ணைகியின் கற்புக்கு மாதவியின் கற்பு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்!//

கண்ணகியை கற்புக்கரசியாக்கியே பெண்களை அடிமைப்படுத்திய இனம் தமிழனமாக தான் இருக்க முடியும். அதுவும் எப்படிப்பட்ட பெண்ணை நாம் இவ்வளவு நாள் புகழ்ந்துக் கொண்டிருக்கிறோம் [தன் கணவனை கொன்றதனால் மதுரையினை எரித்தவள். அதாவது தன் கணவன் பரத்தையினரோடு போவதை பார்த்து பொறுத்துக் கொண்டிருந்தவள், தன் கணவன் இறந்தவுடன் ஆவேசம் வந்து ஒரு நகரினை எரிப்பாள். அருமையான எடுத்துக் காட்டு. இதில் இளங்கோவடிகளின் மனிதாபிமானம் வேறு ஒரமாக இருக்கும்,( குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தவிர மற்றவர்கள் எரிந்து சாம்பலாகட்டும் ) அப்படி சாம்பலானவுடன் எஞ்சியிருப்பவர்கள் எங்கே போவார்கள்.]

இதற்கு மாதவி எவ்வளவோ பரவாயில்லை. பசியினை போக்கும் மருந்தினை கண்டறியும் ஒரு பெண்ணையாவது பெற்றாள். இன்னமும் நளாயினி கதைகள் சொல்லிக் கொண்டு ஆண்கள் நன்றாக ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களும், நல்லதங்காளின் கதை கேட்டு மூக்கினை சிந்திக் கொண்டு இருக்க வேண்டும் என்று கலாச்சார வேலிகள் போட்டு, தாங்கள் அதனை தாண்டி ஒடிக் கொண்டு இருக்கிறார்கள்.

//தங்கர் சொன்னப்போ .. முதல் ஆளா நின்னு மன்னிப்பு கேளுனு குதித்த குஷ்பு.. இப்படி பேசியிருக்கலாமோ??? அதுவும்.. தங்கர் பேசிய அதே மாதிரியான விஷயம்..//

தங்கர் பேசியது வேறு. குஷ்பு சொன்னது வேறு. அடிப்படை விஷயம் தெரியாமல் பேசாதீர்கள். தங்கரை மன்னிப்பு கேட்க வைத்ததில் அரசியல் இல்லாமல் இல்லை. ஆனால்,தங்கரை நியாயப் படுத்தாதீர்கள். சுதந்திரம் வேறு. கொந்தளிப்பு வேறு. கொஞ்சம் திண்ணையில் ஜி.நாகராஜன் கதைகள் படித்து விட்டு நீங்கள் சொல்லவந்த கருத்தினை முன்வையுங்கள்.

 

At 11:59 PM, Blogger SnackDragon said...

சித்ரா ரமேஷ்,
நன்றாக எழுதியுள்ளீர்கள். ஆனால்,
//கண்ணைகியின் கற்புக்கு மாதவியின் கற்பு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்!//
இது நீங்களும் கற்பு என்பதை ஏற்றுகொள்வது போல் உள்ளது , அதை மட்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.

 

At 12:12 AM, Anonymous Anonymous said...

குஷ்பூ தவறாக எந்த கருத்தையும் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை சென்னையில் நடப்பதை கூறி உள்ளார். இதை சென்னையில் உள்ள மாமிகள் எதிர்த்தார்களா பாருங்கள்? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்யும் பெண்களின் பின்னனியை பாருங்கள் அவர்கள் யாரென்று தெரியும். அப்ப மாமிகள் தமிழ் பெண்கள் இல்லையா?

 

At 4:12 AM, Blogger துளசி கோபால் said...

என்னப்பா நடக்குது?

குஷ்பு என்ன சொன்னாங்க,'கல்யாணத்துக்கு முன்னாலே எல்லாப் பொண்ணுங்களும் செக்ஸ் வச்சுக்கணுமுன்னா?'
இது அவுங்கவுங்க சொந்த விருப்பம் இல்லையா? அப்படி வச்சுக்கறவங்க இந்தக் கழிசடை( ங்கறது தெரியாமத்தான்!)
கிட்டே இருந்து நோய் பிடிச்சுக்கப்போகுது, தேவையில்லாம புள்ளைங்களைவேற பொறந்துறப்போகுது. அதனாலே
ஜாக்கிரதையா இருங்கோ'ன்னு சொன்னது மெய்யாலுமா தப்புங்கறீங்க?

இது உலகத்துலே இருக்கற எல்லாப் பொம்பிளைங்களுக்கும்தானே?

ச்சின்னச்சின்னதா வீடுங்க வச்சுக்கிட்டு இருக்கற ஆம்புளைங்க, குறிப்பா அரசியல்வாதிங்கதான் ச்சும்மா இருக்கற
பொம்பிளைங்களை உசுப்பிவிட்டுகிட்டு கலாட்டா செய்யறாங்க.

விதவைத் திருமணம் செய்யறதை ஆதரிக்கிறீங்கல்லே, அப்ப அந்தப் பொண்ணு ரெண்டாங்கல்யாணம் செய்யறப்ப
'கன்னிப் பொண்ணு'ன்னு விளம்பரம் செய்யணுமா?

அட போங்கப்பா. போய் வேலையைப் பாருங்க.

 

At 10:37 AM, Blogger ooviyam said...

பின்னூட்டங்கள்

என்ன பிரச்சனை என்பது புரியவில்லையா இல்லை வேண்டுமென்றே சொல்கிறார்களா? இந்தக் கலாச்சாரம், கற்பு போன்ற விஷயங்களில் ஆண்களை விட பெண்கள்தான் அதிக ஜாக்கிரதை உணர்வுடன் இருக்கிறார்கள். இருந்தாலும் இதைப் பற்றி மட்டுமில்லை எதைப் பற்றி பேசினாலும் எப்படியாவது ஜாதிச் சண்டையைக் கொண்டு வந்து விடுகிறார்கள். விவேக் கத்தி, கம்பு, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களோடு ஒரு கும்பல் பஸ்ஸில் ஏறுவதைப் பார்த்து எங்கப்பா! எல்லோரும் கிளம்பிடீங்கன்னு கேட்பார். ஊர்ல அறுப்பல்லாம் முடிஞ்சு எல்லோரும் சும்மாத்தான் இருக்கோம். அதான் பக்கத்து ஊர்ருக்குப் போய் ஜாதிக் கலவரம் பண்ணலாம்னு கிளப்பிட்டோம் என்று பதில் சொல்வார்கள். அதைப் போல் யார் எதை பற்றிப் பேசினாலும் எப்படியோ சுற்றி வளைத்து ஜாதிப் பேச்சுப் பேசுவது சரியாகப் படவில்லை. இருந்தாலும் இணய நண்பர்களுக்கு என் நன்றி! ஆண்கள் ஒருவரை இருவர் திட்டிக் கொள்வதற்கே ஒரு பெண்ணைப் பயன்படுத்தும் போது இதைப் போன்ற பின்னூட்டங்கள் எதிர்பார்க்கப்படுபவைதான்! யார் என்ன உரத்தக் குரலில் பேசி மறுத்தாலும் நம் கண்ணெதிரே தெரியும் மாற்றங்களை மாற்ற முடியாது இல்லை என்று மறுக்கவும் முடியாது. சும்மா கண்ணை மூடிக் கொண்டு பேசுவதில் அர்த்தம் இல்லை.

கருத்துச் சுதந்திரம் வேறு அநியாயத்தைக் கண்டுப் பொங்கி எழுவது வேறு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஒன்றன் தொடர்ச்சியாகத் தான் மற்றொன்று! எப்போதெல்லாம் வரைமுறையற்ற அடக்கு முறை நிகழ்ந்ததோ அப்போதெல்லாம் அதன் தொடர்ச்சியாக ஒரு புரட்சியும் வெடிக்கும். துளசி மேடம் உங்க பின்னூட்டத்துக்கு கூடுதலாக ஒரு நன்றி. என் கருத்துகளைச் சரியான முறையில் புரிந்து கொண்டு பின்னூட்டம் கொடுத்த ஒரே பெண் நீங்கதான்! பெண் சுதந்திரம் என்பது வெறும் எழுத்தளவிலும் வார்த்தை அளவிலும் மட்டும்
இருக்கிறது என்பதை அவ்வப்போது மீண்டும் மீண்டும் தந்தையர் குலங்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
சித்ரா

 

At 11:41 AM, Blogger ஜோ/Joe said...

சித்ரா அக்கா,துளசி அக்கா,
நீங்கள் இருவருமே உண்மையிலேயே குஷ்புவின் பேட்டியை முழுவதுமாக படித்து விட்டு சொல்லுகிறீர்களா? அல்லது குஷ்பு சொன்னது அனைத்தும் பெண்ணுரிமைக் கருத்துக்களாகத்தான் இருக்கும் போல என்ற அனுமானத்தில் ஒன்று குஷ்புவை முழுமையாக எதிர்க்க வேண்டும் அல்லது முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்ற பொது மனநிலையில் (வச்சா குடுமி,அடிச்சா மொட்டை) பேசுகிறீர்களா? .குஷ்புவின் முழு பேட்டியையும் படித்துப்பார்த்தால் பல நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறார் .ஆனால் ஒரு வாக்கியம் கொஞ்சம் அதிகப்படியாக தெரிகிறது.

//கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.//

இதில் முதல் வாக்கியத்தின் அர்த்தம் என்ன?

இது வெறும் கன்னித்திரையை பற்றிப்பேசுவதாக இருந்தால் ,வரவேற்கப்படவேண்டியது .ஆனால் தொடர்ந்து வரும் வாக்கியம் அவ்வாறில்லை என தெளிவு படுத்துகிறது.

வலுக்கட்டயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களைபற்றி பேசுவதாக இருந்தால்,அதுவும் வரவேற்கப்படவேண்டியது .ஆனால் தொடர்ந்து வரும் வாக்கியம் அவ்வாறில்லை என தெளிவு படுத்துகிறது.

பின் எதைத்தான் சொல்லுகிறது ? உனக்கு விருப்பமானால் யாருடனும் ,எப்போதும் உடல் உறவு வைத்துக்கொள்ளலான் என்பது தான் கருத்தா?(ஆணையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்) தனி மனித சுதந்திரம் என்னும் வகையில் யாரும் எதுவும் சொல்ல முடியாது தான்? ஆனால் வரவேற்கப்பட வேண்டியதா? புகைபிடிப்பதும் ,அளவுக்கதிகமாக குடிப்பதும் கூட தனிமனித சுதந்திரம் தான்..ஆனால் வரவேற்கப்படவேண்டியதா?

தயவு செய்து உடனே எனக்கு முத்திரை குத்த வேண்டாம் .குஷ்புவின் மற்ற அனைத்து கருத்துக்களையும் நான் வரவேற்கிறேன்.

 

At 11:54 AM, Anonymous Anonymous said...

முன்னேற்றம் என்ற பெயரில் கற்பைக் கரன்சிகளுக்கு விற்கும் பரத்தையர்கள் பேசுவதை நியாயப்படுத்த சில கூட்டங்கள்! சானிடரி நாப்கின் பற்றியும் வேசியர் பற்றியும் பதிவுகள் எழுதி அதனை நற்பதிவுகள் என்று கட்டியம் கூற ஒரு பெண்கள் கூட்டம்! முகத்துக்கு நேர் நன்றாக அன்பொழுகப்பேசி முகம் திருப்பி தன் இனத்துக்காகக் குரல் கொடுக்கும் சிலரை என் வாழ்வினில் கண்டிருக்கிறேன். தங்கர் சொன்னதும் ஏற்புடையது அல்ல.

 

At 1:12 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

and about kushboo's interview: could somebody please scan the whole interview and post it?

Thanks.

[am going to post this request in asmany blogs as I can. ie. blogs which have talked about kushboo's interview.

-Mathy

 

At 11:22 PM, Anonymous Anonymous said...

பெண்களின் உடல்நலம் குறித்த பதிவுகளைக்கூட ஏற்க முடியாத
மக்கள் இருப்பது ஆச்சரியம்.

 

At 9:50 PM, Blogger ரவியா said...

//அட போங்கப்பா. போய் வேலையைப் பாருங்க.

//
அப்படி போடுங்க துளசி

 

At 7:40 AM, Blogger சிங். செயகுமார். said...

நான் சொல்ல நினைத்த கருதுக்கள் அனைத்தும் இங்கே நிரம்பி வ்ழிகின்றன. குஷ்பூ பதிவு போடலாம் என நினைத்து சுகாசினி பதிவு போட்டு விட்டேன். உங்கள் கருத்துக்கு வாழ்த்துகள் சித்ரா!

http://singaarakumaran.blogspot.com/2005/11/blog-post_113196862249017962.html

 

At 2:29 AM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 

At 5:56 PM, Blogger Dr.Srishiv said...

please put the moderation of your blog ma, else this sort of bogus messages will dump your blog :( sad, by seeing your link from tulsi amma, i came here, but , ok please put the message moderation immediately.
srishiv

 

At 11:17 AM, Anonymous Anonymous said...

Looking for information and found it at this great site... » » »

 

At 8:46 PM, Anonymous Anonymous said...

Wonderful and informative web site. I used information from that site its great. » »

 

Post a Comment

<< முகப்பு