கம்யூட்டர் கணபதி வாழ்க!

கம்யூட்டர் கணபதி வாழ்க!

வினாயக சதுர்த்தி என்று விடுமுறை, விக்ரம் பேட்டி, வித்யாசாகர் இன்னிசை எல்லாவற்றையும் ரசித்து கூடவே மண் பிள்ளையாருக்கு தொப்புளில் காசு அமுக்கி, குடை பிடித்து கொழுக்கட்டை,வடை,அப்பம்,சுண்டல் என்று விதரணையாக சமைத்து சாப்பிட்டு வாயுத் தொல்லையால் அவதிப்படும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு வினாயகர் பற்றிச் சில தகவல்கள்! வினாயகர் முதலில் தமிழர் கடவுளே கிடையாது. ஐந்து நிலங்களுக்கும் கடவுள்களாக போற்றியது முருகன், இந்திரன், திருமால், கொற்றவை, வருணன் போன்ற கடவுள்கள்தான். சிவன், குமரன், கொற்றவை, காளி, திருமால், பிரம்மன்,இந்திரன், வருணன், கண்ணன் போன்ற கடவுள்களைப் பற்றி சங்க இலக்கியப் பாடல்களில் வருகின்றன. ஐம்பெரும் காப்பியங்களிலும் இக்கடவுள்கள் பற்றியக் குறிப்புகள் இருக்கின்றன.ஆனால் யானை முகத்தோடு உள்ள கடவுளைப் பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. பிற்காலத்தில் சங்க காலத்துக்குப் பிந்திய காலம் குறிப்பாகச் சொன்னால் பல்லவர் காலத்தில்தான் முதன் முதலில் வினாயகர் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்தார் என்று ஆதார பூர்வமாகத் தெரிகிறது. ‘வாதாபி கணபதிம்’ பாட்டு நினைவிற்கு வருகிறதா? நம்ம ‘சிவகாமியின் சபதம்’ கதையில் ஒரு படைத் தளபதி வருவாரே பரஞ்சோதி அவர்தான் சாளுக்கியர்களை வெற்றி கொண்ட பின் அவர்கள் தலைநகரமான வாதாபியிலிருந்து ஒரு வினாயகர் சிலையை கொண்டு வந்து வழிபாடு செய்தார். பின்னர் வினாயகர் தொடர்பான புராணக்கதைகளும் நம்பிக்கைகளும் தமிழகத்திலும் பரவ ஆரம்பித்தது. இந்தப் பரஞ்சோதியார்தான் பின்னர் மிகச் சிறந்த சிவத்தொண்டரில் ஒருவரான சிறுத் தொண்டர் என்று அழைக்கப்பட்டார். பெரிய புராணக் கதைகளிலும் இவர் கதை இடம் பெற்றது.

இவருக்கு ஏன் யானை முகம்? என்ற கேள்விக்குப் பலவிதக் கதைகள் உண்டு. எல்லோருக்கும் தெரிந்த கதை பார்வதி குளிக்கப் போகும் போது தன் மீது பூச வைத்திருந்த மஞ்சளால் ஒரு குழந்தையை உருவாக்கி காவலுக்கு வைத்து விட்டுப் போனாள். அப்போது சிவபெருமான் உள்ளே நுழைய முற்பட இந்தக் குழந்தை அவரோடு உள்ளே போகக் கூடாது என்று மல்லுக்கு நிற்க முன்கோபியான சிவன் ஆத்திரத்தில் தலையை சீவி விட்டார். ஆனாலும் நம்ப சிவனுக்கு இத்தனி கோபமும் அவசரமும் ஆகாது. அவசரப்பட்டு வரம் கொடுத்து மாட்டிக்கொண்டக் கதைகளும் இவரிடம் ஏராளம். அப்புறம் பார்வதி மேடம் வந்து குய்யோ முறையோ என்றுக் கதற வடக்குப் பக்கத்தில் இருந்த யானைத்தலையைப் பொருத்தி பார்வதியால் உருவான மகனுக்கு உயிர் கொடுத்தார்.இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தக் கதைதான். இந்தக் கதையில்லாமல் வேறு சில தத்துவ விளக்கங்களும் உள்ளன. இப்படி ஆர்யக் கடவுளான வினாயகர் நம் தமிழர் வாழ்வில் இடம் பெற நம் திராவிடக் கடவுளான முருகர் பற்றி வட இந்தியாவில் காளிதாஸர் எழுதிய ‘குமார சம்பவம்’ என்ற காப்பியம் மூலம் தெரிய வந்தது. ஆனாலும் நாம் விக்னேஷ்வரரை வழிப்பாட்டுகுரியவராகமுழு முதற் கடவுளாக, எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் வினாயகர் சன்னதி முதலில் வைத்துக் கொண்டாடியது போல் முருகனின் புகழ் வடநாட்டில் ஏனோ சென்று சென்று சேரவில்லை.


பிள்ளையார் என்று சொல்லும் போதே ஒரு எளிமையான வழிபாடுதான் எல்லோர் மனதிலும் தோன்றும். ஏனையக் கடவுள்கள் போல் இவரை வழிபடுவதற்கு விசேஷமான எந்த சிரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அங்கங்கே மரத்தடியிலும், ஆற்றங்கரையிலும் அவர் பாட்டுக்கு தேமேயென்று பழைய துண்டுத் துணியிலும் சிரித்துக் கொண்டு காட்சியளிப்பார். போகிற போக்கில் ஒரு குடம் தண்ணீர் விட்டால் இவர் அபிஷேகக் கணக்குத் தீர்ந்து விடும். காட்டுப் பூவாக கிடைக்கும் எருக்கம் பூவில் மாலை. எளிதாகக் கிடைக்கும் அருகம்புல்லில் பூஜை! இந்தப் பருவத்தில் கிடைக்கும் நாவற்பழம், பிரப்பம்பழம், விளாம்பழம் போன்ற பழங்களை வைத்துப் படைத்தால் போதும். அவருக்குப் பெரிய விருந்தே கிடைத்த மாதிரி!



வினாயகரைப் பற்றி மதிப்பும் மரியாதையும் பெருகுகிற மாதிரி ஒரு அசாத்திய மனோத்ததுவக் கதையும் உண்டு. இவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று பார்வதி ஆசைப்பட்டுப் பெண் தேடினாள். இதற்கு வினாயகர் போட்ட ஒரே நிபந்தனைஅம்மா மாதிரிப் பெண் வேண்டும். கிடைத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொன்னார். அதனால் இன்னும் பெண் கிடைக்காமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அடேயப்பா! சிக்மண்ட் •பிராய்ட் இதைத்தான் சொன்னார்!எல்லா ஆண்களுக்கும் அம்மாவைப் போல் மனைவி வேண்டும் என்பது ஒரு நிறைவேறாதக் கனவாகவே இருக்கிறது. என்ன செய்து போட்டாலும் என் அம்மா மாதிரி செய்ய வராது என்று மனைவியை கடுப்படிப்பார்கள். அம்மா சமைத்தது சுமாராக இருந்தாலும் அந்தப் பருவம், அந்த அன்பு, அரவணைப்பு, முக்கியமாக நன்றாகப் பசித்துச் சண்டைப் போட்டுச் சாப்பிடுகிற பருவம் இவையெல்லாம் சேர்ந்து இளம் பருவத்துக் கனவுகள் போலவே மனதில் அம்மாவைப் பற்றியும் அவள் சமையலைப் பற்றியும் ஒரு அற்புதச்சித்திரம் எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கத்தானே செய்யும்!

6 மறுமொழிகள்:

At 10:56 PM, Blogger ilavanji said...

நல்லதொரு தகவல் களஞ்சியமுங்க இந்த பதிவு!

இவ்வளவு சொன்னீங்க.. ஒரு வாய் சுண்டலையும் விநியோகம் பண்ணியிருக்கலாம்! :)

 

At 1:20 AM, Blogger rv said...

நிஜமாகவே இதுவரை கேள்விப்பட்டிராத புதிய விஷயங்கள்.
அவ்வையார் (இவரே ஒருவரா இல்லை வேதவியாசர் மாதிரி வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த சில பெண்டிர் இந்தப் பட்டம் கொண்டு அழைக்கப்பட்டனரா என்று எனக்கு சந்தேகம் உண்டு) பாடிய விநாயகர் அகவல் எந்த காலத்தில் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆதிசங்கரரும் இவரைப்பற்றி பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பிள்ளையார் தோன்றிய கதையை நான் வேறு மாதிரி கேட்டிருக்கிறேன். ஏதோ ஒரு அசுரன் சிவபெருமானுடன் போர் புரிந்து தலைதுண்டிக்கப்பட்டு, பின் சிவபெருமான் மன்னிக்கவே அவரிடமே வரம் கோரி பிள்ளையாராய் ஆனான் என்று. அதுவும் முதலில் ஒரு ஆட்டின் தலை வைக்கப்பட்டு அது பொருந்தாமற் போகவே, யானைத் தலை வைக்கப்பட்டதென்றும் சொல்லிக்கேட்டிருக்கிறேன். என்னவாகின் என்ன? மொத்தத்தில் பக்தர்களிடம் ஒன்றுமே எதிர்ப்பார்க்காத கடவுள் 'நம்' பிள்ளையார்.

நல்ல பதிவு சித்ரா அவர்களே.. நன்றி

 

At 3:48 PM, Anonymous Anonymous said...

Ganapathi worship introduced by Ciruthondar in TN?

This information is incorrect. Saint Ciruthondar (aka) Paranjothi was the contemporary of Narasimha Pallava, who took part in the famous Vatapi battle, against the Chalukyas. No doubt, he brought a Ganapathi idol from Vatapi and installed it in Ganapathisuram, his home town. However, he did not ‘introduce’ Ganapathi worship in TN.

Much earlier, during his father Mahendra Pallava’s time, Saint Appar (aka) Tirunavukkarasu had sung this verse below, when the Jaina monks (Mahendra Pallava was a Jaina then) let loose a mad elephant to trample him.
http://www.tamil.net/projectmadurai/pub/pm0181/tevaram4a.html#dt4002

Saint Appar sings ‘anjuvathu yAthonRumillai; anja varuvathum illai’ (there is not a single thing which we fear; nothing could happen to us in he future which can frighten us) - with the blessings of ‘Ganapathi ennum kaliRu’ here.

The elephant approaches Appar, but instead of killing him, it bends its knees and bows before him, and turns back in fury on the monks themselves.

Later, after many such miracles, King Mahendra returns back to Saivam. And so, the story that Ganapathi worship was brought in by Ciruthondar is nothing but a mischief propagated by certain elements, for obvious reasons.

Ganesha is the Tantric deity symbolizing Muladhara. He is sung as ‘Muladhara Murthi’ in Tirumantiram, Bhogar 7000 and many such ancient Tamil Tantric / Siddha texts.

I will soon be uploading an exhaustive commentary for Saint Avvaiyar’s Vinayakar Ahaval, wherein one can find more details on the mystic significance of this divine form.

Btw, some interesting URLs:
Worshipped Around the World
- The Ganesha influence:
http://ganapati.club.fr/anglais/indexe.html
http://www.sensin.net/enmyou/hotoke/h1.htm
http://www.hinduismtoday.com/archives/1989/02/1989-02-04.shtml
http://www.atributetohinduism.com/Suvarnabhumi
http://www.hinduonnet.com/thehindu/mp/2002/09/09/stories/2002090900910300.htm
http://www.shreeganesh.com/loving_ganesh/books/lg/lg_ch-13.html


Regards,
P.N.Kumar

 

At 12:11 AM, Anonymous Anonymous said...

test

 

At 12:33 AM, Anonymous Anonymous said...

இந்த ஹாப்லாக் பன்னாடைக்கு வேற வேலையே இல்லையா? எங்க பார்த்தாலும் பேண்டுகிட்டே இருக்கான் பரதேசி

பாதிக்கப் பட்டவன்

 

At 12:38 AM, Anonymous Anonymous said...

`இனய தலம
வண்ணக்கோலங்கல்`

தமிழே ஒழுங்கா தெரியாத பரதேசிக்கு அடுத்தவன் வீட்டில் அடாவடி பண்ண மட்டும் தெரியிது.

ஹாப்லாக் பன்னாடையால் பாதிக்கப் பட்டவன்.

 

Post a Comment

<< முகப்பு