பாடு பொருள்

பாடு பொருள்

தமிழில் வந்துள்ள சில சிறந்த பாடல்கள் வரிசைகள் தரப் போகிறேன். இதில் மற்றவர்களும் கலந்து கொள்ளலாம். அதுவும் மிகச் சிறந்தப் பாடலாக இருக்கலாம். ஆகவே இந்த விளையாட்டில் அனைவரும் பங்கு கொள்ள அழைக்கிறேன்.

பெண்ணை வர்ணித்து வெளிவந்த மிகச் சிறந்த பாடல்கள் முதலில்! சரி ஆண்களைத்தான் முன்னிலைப் படுத்துவோம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டுத் தேடியது தான் மிச்சம்! ஆண்களை பாட்டுடைத்தலைவனாக வைத்து பாதாதி கேச வர்ணனையோடு வந்த பாடல்கள்? இன்னும் தேடிக் கொண்டேயிருக்கிறேன். நீ என் இதயத் தெய்வம், வாழவைத்த தெய்வம் , என் கற்புக்குப் பாதுகாவலன், என் வாழ்க்கையில் வீசிய வசந்தம் இப்படியெல்லாம் பெருமையாகப் பாடியிருக்கிறார்கள். தலை முதல் பாதம் வரை வர்ணனை? திரைப் படப் பாடல்கள் பெரும்பான்மையாக ஆண்களால் எழுதப்பட்டு வருவதால் அவர்களுக்குப் பாடுபொருள் பெண்களாக இருந்து வர்ணிப்பதுதான் இயல்பாக இருக்கிறது. ‘வசீகரா’ வில் கூடத் தேடிப் பார்த்தேன். தாமரையாவது ஏதாவது சொல்லியிருக்கிறார்களா என்று. நீ முயல் குட்டிப் போல் துறுதுறுவென்று அலைவது எனக்குப் பிடிக்கும். கூடவே உனக்கு இரண்டு கேரட் தருகிறேன் என்று ஏதாவது மாதவனைப் பற்றிப் பாடியிருக்கலாம். ஒரு ஆணின் அருகாமையை நினைத்துப் பாடுவதாக இருக்கிறதேத் தவிர வர்ணனையைக் காணும்.

தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது’ வரிகளில் என்னவோ கொஞ்சம் கிண்டல் இருப்பதாகப் படுகிறது. கம்பன் மன்னிக்கவும். இது கூட ‘மானல்லவோ கண்கள் தந்தது’ என்று ஆண் பாடிய பின் பாவம் இவ்வளவுச் சொன்ன பிறகு நாமும் ஏதாவது பதில் சொல்லி வைப்போம் என்றுதான் பாடியிருக்கிறார்கள்.

ஆதி சங்கரர் அருளிய சௌந்தரிய லஹரியிலிருந்து அபிராமிப் பட்டர்ப் பாடிய அபிராமி அந்தாதி, நம்ப தமிழ்த்தாயை இடையிலே மேகலை, கைகளில் வளையாபதி, காதுகளில் குண்டலகேசி, கால்களில் சிலப்பதிகாரம் என்று உச்சி முதல் பாதம் வரை பெண்ணை வர்ணிப்பது என்றால் கவிஞர்களுக்கு எத்தனைக் கற்பனைகள்.


1. வதனமே சந்திர பிம்பமே மலர்ந்த சரோஜமோ! படம்: ஹரிதாஸ்பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்

2. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ படம்: உலகம் சுற்றும் வாலிபன் பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்

3. ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் படம்: தெய்வத்தாய்பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்

4. அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ படம்: பேசும் தெய்வம் பாடியவர்: டி.எம் சௌந்திரராஜன்

5. மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே படம்: பூவா? தலையா? பாடியவர்: டி.எம் சௌந்திரராஜன்

6. அழகில் அழகில் தேவதை படம்: ராஜபார்வை பாடியவர்: கே.ஜே. ஏசுதாஸ்

7. அதிசய ராகம் ஆனந்த ராகம் படம்: அபூர்வ ராகம் பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

8. மாலையில் மலர்ச் சோலையில் மது வேண்டும் மலரும் நீயே பாடியவர்: பி.பி. சீனீவாஸ் படம்:அடுத்த வீட்டுப் பெண்

9. தொடுவதென்ன தென்றலோ மலர்களோ படம்: சபதம் பாடியவர்:எஸ்.பி.பாலா

10. எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ படம்: கேப்டன் மகள்பாடியவர்: எஸ்.பி. பாலா

11. அன்பே அன்பே கொல்லாதே படம்: ஜீன்ஸ் பாடியவர்:உண்ணிகிருஷ்ணன்

12. பொட்டு வைத்த முகமோ படம்: சுமதி என் சுந்தரி பாடியவர்:எஸ்.பி. பாலா

13. அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு! படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இதில் ஒரு பாடலில் வரும் நாயகியைத் தவிர மற்ற நாயகியர் ஏதோ அந்தப் படத்தில் அந்தக் கதாநாயகன் கண்ணுக்கு அப்படி ரதியாகத் தெரிந்தார்களேத் தவிர மற்றபடி அந்தப் பாடலைக் கேட்டு விட்டு ஆஹா இந்தக் காட்சியைக் கண்டு களிக்க முயல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பி•ப்டி கேஜி தாஜ்மஹாலை மட்டும் வர்ணனைக்குப் பொருத்தமாகப் பார்க்கலாம். இதில் மேலும் சில பலப் பாடல்கள் சேர்க்கலாம். இந்த வர்ணனைப் பாடல்கள் மேலும் உங்களுக்கும் தெரிந்தால் சொல்லுங்கள். அதுக்குன்னு சும்மா ‘உன் மை விழி ஆனந்தப் பைரவிப் பாடும்’ ‘பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ போன்ற பாடல்களைச் சொல்லி வெறுப்பேத்தாதீங்க!

14 மறுமொழிகள்:

At 10:19 PM, Blogger Ramya Nageswaran said...

சித்ரா..இது ஒரு பெரிய்ய்ய டாபிக் ஆச்சே...டக்குனு ஞாபக வர இரண்டு, மூணு முதல்லே சொல்லிடறேன்:

1. ஞாயிறு என்பது பெண்ணாக திங்கள் என்பது கண்ணாக..எந்த படம் என்று தெரியலை.

2. அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்..-படம் ஈரமான ரோஜாவே..பாடியவர்: மனோ melodious பாட்டு.

3. எனக்கும் மிகவும் பிடித்த ஒரூ பாடல் - காலையும் நீயே, மாலையும் நீயே - பாடியவர் ஏ.ஏம். ராஜா, படம் தேன் நிலவு.

4. ஆண்களை வர்ணிக்கும், காலத்தால் அழிக்க முடியாத, பாட்டிலக்கியத்தில் ஈடு இணையே இல்லாத ஒரு பாடல்.. என்ன சொல்லிடவா???

"ராசா, ராசா என் மன்மத ராசா!!!"

 

At 11:16 PM, Blogger பத்மா அர்விந்த் said...

மாதவி பெண்மயிலாள் தோகை விரித்தாள் - எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
இராமயண்த்தில் நிறைய இடங்களில் இராமனை பற்ரி பாடல்கள் உண்டு. விற்பெருந்தடந்தோள், அன்றலர்ந்த தாமரை என்றெல்லாம் வரும் அதேபோல சீவகசிந்தாமணியில் சில பாடல்கள் சீவகனின் அழகை வர்ணித்து வரும் என்று நினைவு.

 

At 11:34 PM, Blogger ooviyam said...

dear ramyaa,
the songs you mentioned can you listen again! only one song kaalaiyum neeyee fits into this category. others?
chitra

 

At 11:36 PM, Blogger Ram.K said...

paccha mala poovu
nee uchhi mala thenu

Padam: kizakku vaasal

paadiyavar: SPB

Enakku pidithha paadal

 

At 11:36 PM, Blogger ooviyam said...

dear theen thuLi,
yr name irtself sounds like one of the songs which i mentioned. yes ofcourse how did i forget 'maathavi pon mayiLaaL" good choice thank you
chitra

 

At 11:40 PM, Blogger ooviyam said...

dear chamelion,
i am thinking of a butterfly not of a pacchoondi! anyhow, yr choice is good. do you know who wrote the lyrics?
chitra

 

At 12:32 AM, Anonymous Anonymous said...

senthamizh then mozhiyal

 

At 12:45 AM, Blogger Maravandu - Ganesh said...

அன்புள்ள சித்ரா

எனக்குத் தெரிந்த வர்ணனைப் பாடல்கள் சிலவற்றை நாளை உங்களுக்கு தெரிவிக்கிறேன்

எனது வலைப்பூவில் இப்பொழுது தான்
ஜெயச்சந்திரன் பாடல்கள் என்ற
பதிவை இட்டேன்

எனது பதிவில் உள்ள வர்ணனைப் பாடல்களை ஊதா நிறத்தில் குறித்திருக்கிறேன்

என்றும் அன்பகலா
மரவண்டு

 

At 12:47 AM, Anonymous Anonymous said...

kalangalil aval vasantham

 

At 12:53 AM, Anonymous Anonymous said...

thanjavuru mannu eduthu ..

porkalam

 

At 8:38 AM, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

பாலமுரளிகிருஷ்ணாவின் மயக்கும் குரலில் 'தங்கரதம் வந்தது வீதியிலே' அழகான சாஸ்த்ரீய மெட்டில் அமைந்த மெலடி. பீ. சுசீலாவும் கூடப் பாடுவார்னு நெனக்கறேன்.

இன்னுமொன்று எஸ்.பீ பாலசுப்ரமணியத்தின் குழையும் குரலில் 'வா பொன்மயிலே,.. நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது',..

இன்னும் நிறைய இருக்கு,.. ஆனா,.. இந்த ஆட்டம் புதைகுழி,.. நா வரல்லப்பா இழுக்கறது,.

 

At 3:04 PM, Anonymous Anonymous said...

Please Read Skanda sashti Kavacam.
Varnanai on Lord Murugan is there!

 

At 5:24 PM, Anonymous Anonymous said...

Very nice site! http://www.mold-allergy-symptoms.info/allergic-reaction-to-fruit-itching.html Rate reclaim skin care products

 

At 10:15 PM, Anonymous Anonymous said...

Keep up the good work Celexa relieved my anxiety disney resorts Wilderness lodge resort disney Dimensions yukon gmc ice cream makers small pointy and torpedo tits China internet mobile user voip Super 8 motel moncton Webhost for myspace spirit bracelets Anti aging skin care facts

 

Post a Comment

<< முகப்பு