பரிசு வெறும் பரிசுதான்!

பரிசு வெறும் பரிசுதான்!

சில கல்யாணங்கள் நடந்த கதையினைக் கேட்டால் அப்பாடா ஒருவழியாக கல்யாணம் நடந்து முடிந்து விட்டாதா என்று பெருமூச்சு விட வைக்கும். பெண் பார்க்கும் போதே ஒரு வித குழப்ப நிலையிலிருப்பார் மாப்பிள்ளை. தன்னுடைய அழகுக்கும் அறிவுக்கும் ஈடு கொடுப்பாளா இந்தப் பெண்! தன்னுடைய குடும்பத்துக்கு ஒத்து வருவாளா! பார்த்தால் கொஞ்சம் திமிர் பிடித்தவள் போல் இருக்கிறாளே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார். அதற்குள் இரு குடும்பத்துக்கும் இடையில் இருக்கும் ஒரு பொது நலச் சிந்தனையாளர் ‘இந்தப் பொண்ணை விட்டு விடாதே! அப்புறம் தேடினால் கூட கிடைக்காத வைரக்கல்’ என்று புளுகி மப்பிள்ளையை நம்ப வைத்து விடுவார். கல்யாணத்திற்கு பார்க்கும் சத்திரத்திலிருந்து எடுக்கும் புடவை, நகை நட்டு பதில் மரியாதை சீர் முறுக்கு லட்டு எத்தனை வைப்பது போன்றவைகளிலிருந்து கல்யாணத்தன்றே சாந்தி கல்யாணம் உண்டா என்பது வரைக்கும் இரு வீட்டாரும் உராய்வும் புகைச்சலும் இருந்து கொண்டேயிருக்கும். அப்படியென்ன பெரிய ரதியா பொண்ணு! நல்ல கருப்புத்தான்! நம்ம லலிதாவோட பொண்ணைத்தான் முதல்ல பாக்கறதாயிருந்தது! எப்படியோ இங்க வந்து மாட்டிக்கொண்டாச்சு! பேசாம ஒத்து வரல்லைன்னு கல்யாணத்தை நிறுத்தி விடலான்னு பாக்கறேன் என்று மாப்பிள்ளை வீட்டில் புலம்பிக் கொண்டிருப்பார்கள். நிச்சயதார்த்தமே நல்ல கல்லுக்குண்டாய் இருந்த பெரியப்பா திடீரென்று மண்டையைப் போட்டுவிட தள்ளிப் போய் ஏதோ ஒப்புக்கு நடந்திருக்கும். கல்யாணத்தன்று நடக்கும் கூத்தைப் பார்க்கும் போது கல்யாணம் நின்றிருந்தாலே பரவாயில்லை என்று தோன்றும். காபி வரவேயில்லை. வந்த காபியும் சூடு ஆறிப் போய் பூனை மூத்திரம் மாதிரி இருந்தது. எங்க விட்டு மனுஷாளுக்கெல்லாம் தலைவலி என்று குற்றம் சொல்ல ஆரம்பிப்பார்கள். வழக்கம் போல் ரசத்திலெ உப்பு இல்லை. ஸ்வீட் சைஸ் சின்னதாயிருக்கு! ரெண்டாம் தடவை வந்து விசாரிக்கவில்லை என்று பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அவர்கள் வாழ்வில் பொன் எழுத்தில் பொறிக்கவிருக்கும் ஒரு பொன்னான நாள் என்பதையே மறக்கடித்து விடுவார்கள். பெண்ணைப் பெற்றவரும் சளைக்காமல் தாலி கழுத்தில் ஏறுகிற வரை பணிந்து நடப்பதைப் போல் ஒரு பாவ்லாவாவது பண்ணிக் கொண்டிருப்பார். பெண் கழுத்தில் தாலி ஏறிய பிறகு இந்த பூச்சாண்டிகெல்லாம் பயப்படாமல் இனிமெ இவ உங்க வீட்டுப் பெண். இனிமே இது உங்க வீட்டுக் கல்யாணம் என்று பட்டும் படாமலும் சொல்லி விடுவார். அப்புறம் என்ன? எல்லாக் கல்யாணங்களையும் போல் இந்த கலாட்டாவெல்லாம் மறக்கடிக்கப்படுவதற்கென்றே இன்னொரு கல்யாணம் வந்து விடும். அதுவும் இன்னொரு கில்லாடி சம்பந்தியுடன்!


பெண்ணும் மாப்பிள்ளையும் எல்லாத் தம்பதியினரைப் இந்தக் கசப்பையெல்லாம் மறந்து போல தேனிலவு கொண்டாடி கோவிலுக்கெல்லாம் போய் வந்து பத்தாம் மாதம் ஒரு குழந்தைப் பெற்று சம்சார சாகரத்தில் மூழ்கி விடுவார்கள்தான்! ஆனால் வருடா வருடம் கல்யாண நாள் என்று ஒன்று வந்து மலராத கசப்பான நினைவுகள் வந்து தொல்லைக் கொடுக்கும். குழந்தைகள் வளர்ந்து கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும் கல்யாண போட்டோவைப் பார்த்து ( இப்போதெல்லாம் குழந்தைகள் அப்பா அம்மா கல்யாண போட்டோவைப் பார்த்து உங்க கல்யாணத்தப்போ நான் எங்கேயிருந்தேன்? என்னை ஏன் யாரும் போட்டோ எடுக்கலை என்ற அசட்டுக் கேள்விகள் கேட்பதேயில்லை! ஹ¥ம்!) ஏன் மம்மி நீ சிரிக்கவேயில்லை? டாடீ ஏன் இப்படி முழிச்சுண்டு நிக்கறா, நீயும் டாடியும் லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிண்டே? என்றெல்லாம் அறிவு பூர்வமாகக் கேள்விகள் கேட்கும் போது கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் “ ஆமா கல்யாணத்தன்னிக்கு எங்கே சிரிக்க விட்டா? உங்கப்பா முழிக்கலே! பயந்து போய் அப்படிப் பார்க்கிறார். லவ்வா? அப்படீன்னா? பொண்ணு பாக்க வந்த அன்னிலேந்து லவ்வுக்கும் வாழ்க்கைக்கும் எந்த அர்த்தமும் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு!” என்று கசந்து பேசும் போது கல்யாணம் என்பது வெறும் சடங்குகளுக்காகவும், யாரையோ திருப்தி படுத்த நடத்தப்படுகின்ற விஷயமாகவும் ஆகிவிடுகிறது.


சரி! இத்தனை வியாக்கியானம் எதற்கு? சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் விழாவில் ஒரு அங்கமாக தங்கமுனை போட்டிகள் நடை பெற்றன. அந்த பரிசளிப்பு விழாவில் நடந்த சில விஷயங்களைப் பார்த்த போது எழுந்த சோகம்தான் இது! முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும்தான் மேடையேறி பரிசு பெற முடியும் மற்ற பரிசுக்குரியவர்கள் அங்கே ஒரு கௌண்டரில் போய் அடையாள அட்டையைக் காட்டி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இது முதல் அடி! அப்புறம் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் பரிசுக்குரியவர்கள் இல்லை. கடைசி ரவுண்ட் வரைக்கும் வந்து விட்டதால் அனைவருக்கும் அழைப்பு. எனவே முடிவுகள் மேடையில் தான் அறிவிக்கப்படும். இது இரண்டாவது அடி! தமிழில் சிறுகதைக்கு முதல் பரிசு கிடையாது. அந்த அளவுக்கு உலகத் தரம் மிக்க சிறுகதைகள் வரவில்லை. எனவே முதல் பரிசு இல்லையென்பதால் யாரும் மேடைக்குப் போய் பரிசு வாங்கவில்லை. இது மூன்றாவது அடி! வந்திருப்பர்கள் அனைவருமே இராணுவ வீரர்கள் இல்லை. மென்மையான உள்ளம் கொண்ட இலக்கியவாதிகள்! முதல் பரிசு கிடைத்தால் பெருமைதான்! ஆனால் முதல் பரிசு மட்டுமே பெருமைக்குரியது என்பது எப்படி? பரிசு கிடைத்ததற்காக வாழ்த்தியவர்கள் அனைவருமே கேட்ட முதல் கேள்வி முதல் பரிசு இல்லையாமே! இது என்ன லாப லஷ்டக் கணக்குப் பார்த்து வாங்கும் அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுச்சீட்டா?


என் நண்பரொருவர் இந்த பரிசளிப்பு விழாவிற்கு வரவில்லையென்று சொல்லிவிட்டார். பின்ன எப்படிச் செல்வது? ஐந்து பேரைக் கூப்பிட்டு மூவருக்குத்தான் பரிசு என்பதை அவர்கள் அழைக்கும் போதே சொல்லிவிட்டார்கள். மூன்று பெயர்களைக் கூப்பிடும் போதும் நம்பிக்கையோடு அனைவரும் காத்திருப்போம். நம் பேரைச் சொல்லி விட்டு நம் இரண்டு பக்கங்களிலும் உட்கார்ந்திருப்பவர்கள் பேரைச் சொல்லவில்லையென்றால் அந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு நம் கையை குலுக்குவதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பக்கத்தில் இருந்த இருவருக்கும் பரிசு எனக்கு மட்டும் பரிசு இல்லையென்றாலும் என்னால் தாங்க முடியாது. என்ன முதல் பரிசு கிடைத்திருந்தால் மட்டுமே கொஞ்சம் அதிகப்படியான மகிழ்ச்சி அவ்வளவுதான் என்று யதார்த்தமாக சொல்லி விட்டுப் போனதும் தான் இன்னும் துக்கம் அதிகமாகி விட்டது. இந்தக் கோணத்தில் இரண்டு மூன்று நாட்களாக யோசித்தும்
எதற்காக அந்த பரிசளிப்பு விழாவிற்குப் போனோம்?

மனித மனமே சற்று விசித்திரமானதுதான்! தினந்தோறும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போதெல்லாம் மல்லாக்கப் படுத்திருக்கும் கரப்பான்பூச்சிப் போல் விபத்தில் சிக்கிய பேருந்துகளையும், லாரிகளையும் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் நாம் போகும் வாகனம் மட்டும் பத்திரமாக போய் விடும் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருப்போம்.ஆமாம் நூறு பஸ் போனா அதுல ஒரு பஸ் இப்படித்தான் ஆயிடும் என்ற சொல்லிக்கொள்வோம்.ஏனென்றால் பயணம் போகும் போது விபத்தைச் சந்திக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சிறுபான்மைதானே! ஆனால் அதே போல் லாட்டரிச்சீட்டு வாங்கும் போது பத்தாயிரம் பேரில் ஒருவருக்குத்தான் பரிசு விழும் என்பது தெரிந்தும் அந்த பத்தாயிரத்தில் ஒருவராக நாம் இருக்கக்கூடாதா என்ற நம்பிக்கையில் பரிசுச் சீட்டு வாங்குவோம்.சாதாரண வாழ்க்கையில் இதைப் போன்ற கணக்கியல் தத்துவங்கள் நிறைய உண்டு!


ரொம்ப சீரியஸாகப் போய்விட்டது. சரி! இன்றைக்கும் கடவுளைத்தான் கூப்பிடப்போகிறேன். கணவன் மனைவி இருவரும் முதல் நாளிரவு விருந்துக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து வயிறு சரியில்லாமல் போய்விட்டது. மறுநாள் காலையில் எழுந்ததிலிருந்தே இருவரும் மாறி மாறி டாய்லெட் பக்கமே சுற்றிக் கொண்டிருந்தனர். “ஐய்யோக் கடவுளே”, என்று கத்திக் கொண்டே வயிற்றைப் பிடித்துக் கொண்டே இருவரும் மாறி மாறி கழிவறைக்குப் போவதும் வருவதுமாக இருந்தனர். “ ஐய்யோக் கடவுளே! நீங்க இன்னும் உள்ளத்தான் இருக்கீங்களா”, என்று மனவி கதவை இடிப்பதும் “ ஐய்யோ கடவுளே கொஞ்சம் சீக்கிரம் வெளியே வரக்கூடாதா”, என்று கணவனும் கத்திக் கொண்டிருந்தான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டே அவர்கள் குழந்தை பள்ளிக்குக் கிளம்பியது. அன்று பள்ளியில் அவர்கள் ஆசிரியர் பாடம் நடத்தும் போது இறைவன் எங்கே இருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். உடனே நம் சமத்துக் குழந்தை கையைத் தூக்கி எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும் என்று ஆனந்தக் கூக்குரலிட்டது. எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்லியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? உங்கள் வீட்டு டாய்லெட்டில்தானே!


இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம் பொருள் தானே!

11 மறுமொழிகள்:

At 9:26 PM, Blogger ரவியா said...

இரண்டு பதிவுகளாகப் போட்டிருக்கலாமே !

 

At 9:28 PM, Blogger வீ. எம் said...

நல்லா இருக்கு படிக்க.. நல்ல சரளமான எழுத்து .. !நீளம் தான் கொஞ்சம் அதிகம்

 

At 10:07 AM, Blogger துளசி கோபால் said...

// வந்த காபியும் சூடு ஆறிப் போய் பூனை மூத்திரம் மாதிரி இருந்தது//

ஐய்யோ, எங்க பாட்டிகூட இப்படித்தான் எவ்வளவு சூடாக் கொடுத்தாலும்.... இப்படியேதான்!!!!

ஆஹா, வாங்க வாங்க. ஜாலியா இருக்கும். உடனே ஒரு வலைமகாநாட்டைக் கூட்டிறனும்:-)

ஆஸ்கார் அவார்டு வாங்கறப்ப நடக்கறதை நினைச்சுக்கிட்டேன்.
பேர் கூப்புட்டதும் வேண்டியவங்களைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு அழுவணும், இல்லே?

 

At 11:49 AM, Blogger ooviyam said...

அன்புள்ள துளசி,
ஆஸ்கார் அவார்ட்டில் finalist வருபவர்கள் பழமும் தின்னு கொட்டையும் போட்ட
ஜாம்பவான்கள். அவர்களோடு நாம் நம்மை கற்பனை செய்ய முடியுமா? ஏதோ அதைப்
போலத்தான் செய்ய நினைத்து நம் உணர்ச்சிகளோடு விளையாடி விட்டார்கள்!
பரவாயில்லை! இவ்வளவு எழுதுகிறோம், படிக்கிறோம். அதே முதிர்ச்சியோடு
இதையும் ஒரு அனுபவமாகப் பார்க்க வேண்டும். அதிலும் நாம் அதில் இல்லாமல்
வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக மட்டும் என்று கற்பனை செய்து
கொண்டால் பிரச்சனையே இல்லையே!
நீங்க இணைய மாநாடு நடத்துவீங்க! அது உங்க பாடு! எனக்கு உங்க வீட்டு
ஊஞ்சலில் ஆடணும்! அதுதான் முக்கியம்
அன்புடன் சித்ரா

 

At 11:49 AM, Blogger ooviyam said...

அன்புள்ள ரவியா,
தங்கள் யோசனைக்கு நன்றி. இரண்டு பதிவுகளாக போட்டிருந்தால் இரண்டுக்கும்
உள்ள தொடர்பு என்ன என்பது உங்களுக்கு வந்து செர்ந்திருக்குமா?
இருந்தாலும் என் எடிட்டரை இன்னும் சிறப்பாக வேலை செய்ய வைக்கிறேன்.
சித்ரா

 

At 11:50 AM, Blogger ooviyam said...

இனிய நண்பருக்கு,
படிக்க நல்லா இருந்தா கொஞ்சம் நீ... ளமா இருப்பதை மன்னிக்கக் கூடாதா?
அன்புடன் சித்ரா

 

At 5:25 PM, Blogger எம்.கே.குமார் said...

அன்பு சித்ராவிற்கு,

பரிசு வாங்கிய உங்களைப் பாராட்டுவதா மேடை வரை சென்றுவிட்டு வெறுங்கையோடு திரும்பி வந்த நண்பரை தேற்றுவதா தெரியவில்லை.

எனினும் சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற உங்களூக்கு எனது வாழ்த்துகள்.

எம்.கே.குமார்.

 

At 9:20 PM, Anonymous Anonymous said...

What a great site Northland buick 99 honda accord body kit parental control on cds imitrex manufacturer Fully inserted dildo Hardcore blog unlock parental control

 

At 1:56 AM, Anonymous Anonymous said...

What a great site Lexus gs400 clear tail lights www peugeot

 

At 4:46 PM, Anonymous Anonymous said...

Best regards from NY! http://www.biker-babes.info/raven-and-jeff-interracial.html interracial Daniel moore alabama football print blackberry shareware Free hypnosia downloads tp stop smoking Find black floral handbag free interracial mpeg Etka volkswagen free download leater sofa Ativan withdrawls Dream ionamin online order pharmaceutical Medical weight loss Discount tire centers huntington beach penis enlargement pills effective

 

At 9:34 PM, Anonymous Anonymous said...

This is very interesting site... Didital projectors About fat girls porn sites Dvd car jesen buy levitra online The mill casino in coos bay oregon chubby blonde hardcore action http://www.top-asian-americans.info/Spyware-sucks-my-fat-ass-buggar-off.html Fittest pornstars Teen facial blowjob Blowjob 16

 

Post a Comment

<< முகப்பு