பாடுபொருள் II

பாடுபொருள் II

சிறந்த திருமண இரவுப் பாடல்கள். இதில் பாதி பாட்டுக்கு மேல் வில்லங்கமான முதலிரவுப் பாடல்கள்தான்! முதலிரவே நடக்காது இல்லை பாடி முடிந்ததும் கொஞ்ச நாட்களில் பிரிந்து விடுவார்கள்.

1. கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்
படம்:இருவர் உள்ளம் பாடியவர்: டி.எம். சௌந்திரராஜன்
(சரோஜா தேவியின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் சிவாஜியின் முகத்தில் தெரியும் பதட்டம்)

2. மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாக கையைத் தொட்டு
படம்: சாரதா பாடியவர்: டி.எம் சௌந்திரராஜன்
(பாவமாக இருக்கும். எஸ் எஸ் ஆர் ரொம்ப அனுபவித்துப் பாடுவார்..ஹ¥ம் எதுக்கும் கொடுத்து வைக்க வேண்டாமா?)


3. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?
படம்: நிச்சயதாப்பூலம்
( இது சூப்பர் பாட்டுத்தான்! ஜமுனாவைப் பாவாடைத்தாவணியில் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்)

4. துள்ளித் திரிந்த பெண் ஒன்று
படம்: காத்திருந்த கண்கள் பாடியவர்: பி.பி.சீனிவாஸ்
(காதல் மன்னன் படமாச்சே! இனிமையான முதலிரவுதான்!)

5. அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே!
படம்: பலே பாண்டியா பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா,பி.பி.சீனிவாஸ்,எல்.ஜமுனாராணி
( அப்பாடா!ஒன்றுக்கு இரண்டு ஜோடி டூயட்! பாடல் முடியும் போது எம்.ஆர்.ராதா வருவது...
இன்னும் நன்றாகத்தான் இருக்கும்! அப்பாடா! இரண்டு ஜோடிகளும் ஆளுக்கு இரண்டு
பாராக்கள் பாடி எப்போது முடியும் என்று காத்திருக்கும் போது எம் ஆர் ராதா வந்து விடுவார்!)

6. கேட்டுகோடி உருமி மேளம்! படம்: பட்டிக்காடா?பட்டணமா? பாடியது: டி.எம் சௌந்திரராஜன்,எல்.ஆர் ஈஸ்வரி
(நிஜமாகவே இது முதலிரவுப் பாட்டுதானா?)

7. கண்ணென்ன கண்ணென்ன கலங்குது? பெண்ணென்ன பெண்ணென்ன பெணென்ன மயங்குது? படம்: பெரிய இடத்துப் பெண் பாடியது: டி.எம். சௌந்திரராஜன்
(இது முதலிரவுப் பாட்டேயில்லைதானே?மறுநாள் காலையில் பாடும் பாட்டையும் சேர்த்துக்கொள்ளலாமா?)

8. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு! ஆனால் இதுதான்..
படம்: கற்பகம் பாடியவர்: பி.சுசீலா
(இந்தப் பாட்டை விட பேயாக வந்து பாடும் பாட்டு இன்னும் நன்றாக இருக்கும்)

9. மயங்குகிறாள் ஒரு மாது! படம்:பாசமலர் பாடியவர்: பி சுசீலா
(தங்கை போட்டோ பெட் ரூமில் இருப்பதை தர்மசங்கடத்தோடு பார்த்து கவிழ்த்து வைத்து விட்டு எம் என் ராஜத்தை பார்த்துச் சிரிப்பார் சிவாஜி! அருமைத் தங்கை அண்ணனுக்காகப் பாடும் வித்தியாசமானப் பாட்டு)

10. என்னதான் ரகசியமோ இதயத்திலே நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே!
மலர்கள் நனைந்தனப் பனியாலே என் மனமும் குளிர்ந்தது இரவாலே!
படம்: இதயக்கமலம் பாடியவர்: பி. சுசீலா’

( கே.ஆர்.விஜயா நடிக்காமல் சிரித்தால் மட்டும் போதும். நடிப்பு என்ற பெயரில் அவர் காட்டும் அதீத பாவங்களும் வெட்கமும்)

12. தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
படம்: தாமரை நெஞ்சம் பாடியவர்: பி.சுசீலா
(இந்தப் பாடல் படத்தில் இடம் பெற்றதா இல்லையா? தெரியவில்லை! கடைசி இரண்டு வரிகள் மட்டும் படத்தில் வாணிஷி பாடுவதாக வருகிறது.)

13. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திடும் நாள் படம்:மைக்கேல் மதன காமராஜன்
பாடியவர்: கமலஹாசன், எஸ்.ஜானகி
( ஊர்வசியை நடிப்பில் ஒரு ராட்ஸஸி என்று தெரிந்து கொண்டது இந்தப் படத்தில் தான்)

14. இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி படம்: தேவர்மகன் பாடியவர்: கமலஹாசன், எஸ்.ஜானகி
(தமிழ் திரைப்படத்தில் இரவுப் பகல் பார்க்காமல் இயல்பாக இருவர் இணைந்ததைப் பார்த்தது)

15. நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்காய்
படம்:முள்ளும் மலரும் பாடியவர்: வாணி ஜெயராம்
(ரஜனியை ரசிக்க ஆரம்பித்ததே இந்த முரட்டு அண்ணனுக்குப் பிறகுதான்)

16. நாணமோ இன்னும் நாணமோ
படம்: ஆயிரத்தில் ஒருவன் பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன் பி.சுசீலா
(இந்தப் படத்தில் இருவருக்கும் திருமணம் ஆயிற்றா இல்லையா யார் வில்லன் போன்ற குழப்பங்களுக்கு முடிவே இல்லை! ஆனாலும் அள்ளக் அள்ளக் குறையாதப் பாடல்கள்!)

இன்னும் நிறையப் பாடல்கள் இருந்தாலும் மணிரத்தினம் பாணியில் கிழவிகள், குழந்தைகள் கும்மாளம் போட்டுப் பாடும் பாடல்களையெல்லாம் என் லிஸ்ட்டில் சேர்க்கவில்லை
இன்னும் ஏதாவது இருந்தால் எழுதவும். ரொம்பக் கருத்துள்ளப் பாடல்கள் இடம் பெற்றதால் இந்தப் பாடல் காட்சிகளைக் கண்டு களிக்கலாம்.

13 மறுமொழிகள்:

At 12:17 AM, Blogger Boston Bala said...

அருமையான தேர்வுகள்! அப்படியே மலரும் நினைவுகளில் மூழ்கிப் போனேன்.

 

At 12:32 AM, Blogger சிவா said...

முக்கியமான பாட்ட வுட்டுட்டீங்களே! 'மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்..இது முதல் இரவு' - 'முதல் இரவு' பட பாடல். எவ்வளவு அருமையான பாடல்

 

At 12:37 AM, Blogger பத்மா அர்விந்த் said...

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அம்மாஞ்சி ராஜா - மறந்து விட்டீர்களா.

 

At 12:37 AM, Anonymous Anonymous said...

muthu mani maalai -chinna gownder

 

At 12:38 AM, Anonymous Anonymous said...

nanamoo innu nanamoo
rikshakkaran

 

At 5:13 AM, Anonymous Anonymous said...

Chitra

Excellent collections. Thank you for taking me to those good old BW film's first night songs. Most of the songs would have a full moon on the sky and a mildly blowing breeze would slightly wave the windo screens. Doves are additional features in some songs.

Please continue

Thanks
Sa.Thirumalairajan

 

At 8:40 AM, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

This comment has been removed by a blog administrator.

 

At 8:41 AM, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

This comment has been removed by a blog administrator.

 

At 2:43 PM, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

ஸீ எஸ் ஜெயராமனின் கரகரகுரலில் ஒரு மெலடி,..

'அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்,..'

கூடவே ஹம்மிங்க் எஸ். ஜானகியா?

சிவாஜி/பத்மி நடிப்பு,..
இதுல வருமா சித்ரா?..

 

At 7:16 PM, Blogger Unknown said...

ahaa arumaiyaana thoguppu... ninaikka ninaikka thithippu

Dev
http://mindcrushes.blogspot.com/

 

At 10:45 AM, Blogger பாலராஜன்கீதா said...

1. கீழ்க்கண்ட அந்தவகையில் வருமா ?

பூம்புகார் - எஸ்.எஸ்.ராஜேந்திரன் விஜயகுமாரி - பொன்னாள் இதுபோலே
வருமா இனிமேலே -

 

At 10:00 PM, Anonymous Anonymous said...

This is very interesting site... » »

 

At 6:32 AM, Anonymous Anonymous said...

This is very interesting site... small business health insurance ny buy meridia Chevrolet suburban chat rooms forums Girl deep dildo Pa business health insurance small Massachusetts state camping cites Free jansport backpacks Hot sexy girls pamela anderson nude online baccarat evolutions of internet advertising health insurance Coco lesbian Side effects of wellbutrin sr 150mg Buick gs 1987 Tv show cylon Play roulette slot Foreclosure homes in hawaii Strippoker video aim

 

Post a Comment

<< முகப்பு